மடமெனும் இருளை போக்கி அறிவெனும் சுடரை ஏற்று

*


பாழ்படும் மனதை சமைத்து
பழுதிலா வண்ணம் படைத்து

குறைபட்ட மனதை நீக்கி
குறைவிலா திண்ணம் ஊட்டி

இருள்படும் மனதை அடக்கி
ஒளிதரும் வண்ணம் ஆக்கி

விதியெனும் துன்பம் கடக்க
மதியெனும் மனதை நோக்கி

மடமெனும் இருளை போக்கி
அறிவெனும் சுடரை ஏற்று.





*

எழுதியவர் : (30-Nov-24, 9:11 pm)
பார்வை : 17

மேலே