இது ஒரு கடல் அலையின் காதல் போல்
கடல் அலைக்கு வான் நிலவின் மீது
தீரா அதீத காதல்
எழும்பி எழும்பி பார்க்கிறது
நிலாவைத் தொட்டு அணைக்க
பாவம் அலை.......நிலவுக்கோ
கொஞ்சமும் கருணை இல்லை
பாரா முகமாய் நிலவு
இது அன்று தொடங்கி இன்றும்
தொடரும் அலையின் ஒரு முகக் காதல்
அலையே கவலைக் கொள்ளாதே
உன்னைப் போல்தான் என் காதலும்
நானும் அவள் மனதில் இடம் பிடிக்க
விடா முயற்சியில்.....
காலம் கனிந்து வருமா
கன்னி மனம் மாறுமோ.....