உன் எதிர்காலம் உன் கையில்

அழகான ஆடைகள் இல்லை
பணம் பொன் பொருள் ஏதும் இல்லை
பட்டங்கள் பதவி இல்லை
சொந்தம் பந்தங்கள் யாரும் இல்லை - இவனுக்கு
எதிர்காலத்தில் என்ன செய்வான் இவன் என்று
ஏளனம் செய்பவர்கள் செய்யட்டும் - கலங்காதே
ஏளனம் பேசியவர்கள் முன் எதிர்த்து இன்று ஏளனம் பேசிய நீங்கள் எல்லாம் எதிர்காலத்தில் எனக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவீர்கள் என்று சூளுரைத்து சிந்தனை செய்
எத்தனை பெரிய படிப்பினை படித்தாலும்
உனது அறிவினை வளர்த்தால்
அகிலத்தையே நீ ஆளலாம்
பாடப்புத்தகங்களை மனப்பாடம் செய்வதால்
மதிப்பெண் மட்டுமே பெறலாம் - அறிவு வளராது
அறிவு வளர்வது உன் சிந்தனையில் தான்
நீ படிக்கும் புத்தகங்களை ஆராய்ந்து படி
உனக்குள் எழும்பும் கேள்விகளுக்கான விடையை நீயே
தேடித்தேடி கண்டுபிடி
சிந்தனையும் வளரும் அதனால் அறிவும் வளரும்
தனிமையில் தவிக்கிறேன் என்று
மனம் உடையாதே
தனிமையில் தான் நீ யார் என்பதே உனக்கு புரியும் - சிந்தனை செய்
நீ தனிமையில் இருக்கும் போது தான்
வானமும் பூமியும் மண்ணும் கல்லும் மரமும் புல்லும் செடியும் பூக்களும்
உனக்கு ஆசானாக மாறி
புதுப் புதுப் பாடங்களை புரிய வைக்க
அனைத்தையும் நீ கற்றுக் கொள்வாய்
எதிர்காலத்தில் என்ன செய்வான் என்று ஏளனம் பேசியவர்களை என்ன செய்யலாம் என்று நீ ஆலோசனை செய்வாய் - அப்போது உணர்வாய்
மனிதன் நடத்திய நாடகங்களும்
பாசங்கள் வேசங்கள் அனைத்தும் அறிவாய்
உன் இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் நினைத்து உன் மனதை நீயே தெளிவாக்குவாய்
அதன் பிறகு
ஆயிரம் சோதனைகள் உன் வாழ்வில் வந்தாலும்
அனைத்திலும் சாதிக்கும் திறமையை பெறுவாய்
தீராத பிரச்சனைகள் வந்தாலும்
பயத்தை துரத்தியடித்து
திறம்பட தீர்வினை காண்பாய்
உனது எதிர்காலம் உன் கையில் என்று உறுதிமொழி எடுப்பாய்
அதை
அறிவுடனும் துணிவுடனும்
விடாமுயற்சியுடனும் சிந்தித்து செய்பட்டு ஒளிமயமான எதிர்காலத்தை பெற்று உயர்த்து நிற்பாய்
அன்று
உன்னை ஏளனம் செய்தவர்கள்
உன் உயரத்தில் இருந்து எட்டி பார்பார்கள்
உனக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்
மன்னாதி மன்னன் வாழ்க வாழ்க என்று கோஷம் போடுவார்கள்!!!