மலர்களே நித்தம் உங்களுடன் உரையாடல் புரியும் இவள் யார்

மலர்களே நித்தம் உங்களுடன் உரையாடல் புரியும்
இவள் யார் ?
மௌனமாக விரிந்து மென்மையாகக் புன்னகைக்கிறீர்கள்
விரல்களால் வருடி இதழ்களால் முத்தமிடுகிறாள்
நாணத்தில் நெளிந்து தேன் சிந்திட ...இன்னுமோர் முறை
என்று கேட்கிறீர்கள் !

எழுதியவர் : கவின் சாரலன் (8-Feb-25, 6:00 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 25

மேலே