கலர் படமாய் மாற்றியவன் நீ தானே

கருப்பு வெள்ளையாய் இருந்த என் கண்களுக்கு
கலர் காட்சிகளை காட்டியவன்
நீ தானே
கருப்பு வெள்ளையாய் இருந்த என் மனதில் கலர் கனவுகளாய் உன் எண்ணங்களை விதைத்தவன்
நீ தானே
உணர்வில்லாத கல்லாய் இருந்த என்னை கலர் ஓவியமாய் மாற்றியவன்
நீ தானே
கருப்பு வெள்ளையாய் இருந்த என் வாழ்க்கையை கலர் படமாய் மாற்றியவன்
நீ தானே
ஒன்றுமறியாத எனக்கு உலகமே நீ என உணர்தியவனே
என் உயிரில் உயிராய் ஒன்றானவனே
உன் கரம் பிடித்து உன்னுடன் வாழும் வாழ்க்கையை தினமும் கனவுகளில் கலர் படமாய் நிகழ்த்தி பார்க்கிறேன்!!!

எழுதியவர் : M. Chermalatha (13-Feb-25, 8:00 pm)
சேர்த்தது : M Chermalatha
பார்வை : 44

மேலே