காருடன் பங்களாவும் கட்டிநீ வாழலாம்

பால்சுரக்கும் நல்ல பசுவின் மடுவைப்போல்
நூல்சுரக்கும் நல்லறிவை நன்குநீ பெற்றுவிட்டால்
பேரும் புகழும்நீ பெற்றிட லாம்அறி
ஊரும்பார் போற்றும் உனை
பால்சுரக்கும் நல்ல பசுவின் மடுவைப்போல்
நூல்சுரக்கும் நல்லறிவை நன்குநீ பெற்றுவிட்டால்
காருடன் பங்களாவும் கட்டிநீ வாழலாம்
பேருடன் நற்புகழும் பெற்று