தோழனும் நானும்
இறுக்கமான பிடி
இருண்ட மனதில்....
உருக்கமான துனை உடைந்த சிந்தனையில்...
உற்ற தோழனாய் அவன்...
மாலை நேரத்தில் மெளன பேச்சும் மரத்தடி நிழலும் அவனுடன்...
அந்தி வேளையில் வரும் அவன் நேசம்
வழுக்காத பாசம்....
சித்தனாய் அவன் வருகை
புத்தனாய் என் மாற்றம்....
ஆருயிர் நண்பா 'தனிமை'...
தனியாக வந்தாய் என்னுடன் இனையானாய் தனியாக செல்கிறாய்...
வஞ்சகன் நானே....
-இந்திரா

