அருகில்வா வந்து நில்

அருகில்வா வந்துநில் ஆலநிழல் கீழே
உருகிடும் வெய்யிலில் உன்னுடல்செம் மேனி
கருத்திடும் எந்தன் கவிதைமனம் வாடும்
விரைந்து நிழல்கீழ்நீ வா

--- ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

அருகில்வா வந்துநில் ஆலநிழல் கீழே
உருக்கிடும் வெய்யில் உடலை -- கருத்திடும்
வெண்மேனி எந்தன் மனம்மிக வாடும்வா
பெண்ணே நிழல்கீழ்நிற் போம்

---- இரு விகற்ப நேரிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (8-Mar-25, 11:52 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 20

மேலே