தேடும் காலம்…

தேடும் காலம்…..

நல்லதை செய்திட
நல்லவனை தேடும் காலம்
தெருவிற்கு கொடுக்க
போவோரும் வியப்பது
காய்த்த மரம்
கல் அடிபட்டு
கவலை பாடா ….

தேர்தல் காலம்
தெளிவு படுத்த
சுவரொட்டி சில்லரைக்கு
தவம் கிடந்தவன் சொன்னது
ஐந்தாண்டு பதவிக்கு
பல கோடி செலவு
அடுத்த வேளை
சோறு தீண்டாமை
என் போன்றோர்
சிறை வாசம்….

சந்தர்ப்பம்
மயிரிழையில் ஊசலாட
வயற் காடு ஏற்கும்
வயிற்றெரிச்சல் சலங்கை ஒலி
நா காத்த உமிழ் நீர்
நாற்பட்ட கஞ்சிதனை
தலை மேல் கலசம் சுமக்க
எங்கள் வாரிசுகள்
படு துன்பம்
இனி தொடரா இருக்க
தேர்தலை தினம் தோறும் நடத்த
நல்லவன் நாங்கள்
சுவருக்கு சில்லரைகளை
அர்ப்பணிக்க மக்களவையில்
மகஜர் வைப்போம்….
பார்த்துக் கொள்ளவும்
எங்கள் சின்னம் ……..
மண் கலம் !

எழுதியவர் : மு.தருமராஜு (20-Apr-25, 1:40 pm)
பார்வை : 42

மேலே