சமூகன் சரவணன்

சமூகன் சரவணன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை

சமூகன்
நீ வைத்தியலிங்கம் பெற்றெடுத்த தங்கம்
குள்ளம்மாள் வயிற்றில்
உருவான உயர்ந்த மனிதன்
,
நீ பிறந்தது
நாவற் குளம்
உன்னால் வாழ்வதோ ஏழைக் குளம்

தன் வீடு காக்கப் பிறந்தவர்களுக்கு மத்தியில் நீ தாய் நாடு காக்கப் பிறந்தவன்

உன் சேவையால் புதுவையில்
புது வெயில் பிறந்தது

நீ ஏழைகளுக்கு அன்னதானம் செய்யும் அண்ணன்
துயர் உருவோரைக் காக்கும் கண்ணன்

ரத்த தானம் செய்யும் மன்னன்
பெற்ற தாய்களுக்கே உணவளிக்காத நாட்டில் நாய்களுக்கு உணவளித்து மகிழும் கார்முகில் வண்ணன்

இல்லையென்று வருவோருக்கு
இல்லை என்று சொல்லாது
அவர்களுக்கு அள்ளிக் கொடுப்பதில் நீ கலியுகக் கர்ணன்

வாசனைக்காக
மங்கையர் தன் தலையில் சூடுவது பூவை

பிறர் வாழ்வதற்காக
நீ உன் தலையில் சூடியிருக்கிறாய்
சமூகசேவை

சமூகனே
சண்முகனே
உன்னை எப்படி அழைத்தாலும் சமூக சேவை எனும் பொருளே வருகின்றது புதுவை சரவணனனே

நீ வாழ்க பல்லாண்டு

எழுதியவர் : குமார் (11-May-25, 11:23 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 23

மேலே