காற்றும் நீரும் விளையாண்டு கொண்டிருக்கின்றன

காற்றும் நீரும் விளையாண்டு கொண்டிருக்கின்றன

அசையாமல் நின்றிருந்த
ஏரியின் நீரை
உரசி அசைத்து விட்டு
செல்கிறது காற்று
அசைந்து விட்ட
நீரோ
அலை அலையாய்
வட்டமிட்டு வந்து
உரசிய இடத்தில்
வந்தடைந்து
மீண்டும் அசையாமல்
நிற்கிறது

அதுவரை காத்திருந்த
காற்று மீண்டும்
உரசி அசைத்து விட
அசைந்த நீரோ
அலை அலையாய்…..
இப்படியே
வேடிக்கை விளையாட்டாய்
விளையாண்டு
கொண்டிருக்கிறது
காற்றும்
ஏரியின் நீரும்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (15-May-25, 4:30 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 60

மேலே