பிறந்தநாள் வாழ்த்து

பழைய நட்பில் ஒருத்தி
ரொம்ப எதார்த்தமான
Friend . பேசி எல்லாம்‌ இருக்கோம்.
அன்பு தாய்மை சேவை மனப்பான்மைதான் இருக்கும்
எல்லாப் பேச்சிலும்.‌ ஒரு லட்சிய பாதையை தேர்ந்தெடுத்து
இப்படித்தான் பயணப்படப் போறேன்
னு முடிவெடுத்து அதில்
உறுதியாக நின்னு முகத்தில்
அப்பவும் இப்பவும் துளிக்கூட
சிரிப்பு மாறாமல் அதை வெற்றிகரமாக
நடத்தியும் வருவது என்பது சாதனை.

மனிதர்கள் எல்லோரும்
அவரவர்களுக்குத் தெரிந்தவிதத்தில்
அவரவர்ப் பிடிவாதங்களை
வெளிக் கொணர்கிறார்கள்.
சற்றும் பிடிவாதமில்லாத பிடித்தளராத
நிதானமானப் பிடிவாதத்தைப் பார்த்திருக்கிறீர்களா ? அதுதான்
அவள்தான் இவள். கிரேஸிக்கு
ஆசைகள் என்னவா இருக்கும்னு
தெரியாது. ஆனா எப்பவும் சிரிச்ச‌முகத்தோடு நட்புகளை
அணுகி வரும்போது, எல்லோரிடத்திலுமே இருக்கும் தோன்றல், இப்படிப் பட்ட தேவதைக்கு என்னக் குறை இருந்துவிடப் போகிறது என்பதாகவே இருக்கும்.

அஞ்சி நிமிஷம் யார்ப் பேசினாலும்
அவர்கள் யாருக்கேனும் இன்ஸ்டண்ட் ஆறுதல் கொடுக்க முடியுமா என்றால், இவளையன்றி யாராலும் முடியாது என்றுதான் சொல்லவேண்டும்.‌ சொல்லும், நினைக்கும் எல்லோருக்குமான சொந்தமாகவோ
நெருங்கிய நட்புறவாகவோ இவளைக் கருதிவிட முடியாத தேவதை, ஆயிரமாயிரம் இதயங்களில்
இறைவியாக வீற்றிருப்பவள்.

""அன்பின் சாயலில் கடவுளைப் ப்ரசவிக்கிறாளா ?
கருணை நிழலில் தாய்மையைப்
ப்ரசவிக்கிறாளா ? ""

""ஒரு பூமரம் அன்று பூத்ததுத் தொடங்கி
இன்றுவரை அதன் சரங்கள் எல்லோர் மீதிலும் உதிர்ந்துவிழுந்தும் வாடாமல் இருக்கின்றன. அந்த பூமரம் இன்றும்
அப்படியேத்தான் பூத்துக் குலுங்கிக்
கொண்டே இருக்கிறது. இதோ அனைவருக்கென சிரித்துக் கொண்டும் நடமாடிக் கொண்டும்""

உன்‌ மகிழ்ச்சியை, உன் வளர்ச்சியை எங்கிருந்தோ ஒரு ஓரத்திலிருந்து கண்டு மகிழ்வதைத் தவிர வேறென்ன பேரானந்தம் இவ்வாழ்வில் எனக்கு இருந்துவிடப் போகிறது.‌ ஆட்கூட்டங்களால் நிறைந்திருக்கும் அவைக்களங்கள் எல்லாம் லட்சோபலட்ச கரகோஷங்களால் நிரம்பிவழியும் ஒருநாளில்,
லட்சத்தி ஒன்றாவதாக
எனது கரமுழக்கங்களும்
பிரதிநிட்சயமாய் அவற்றுள்
கலந்து மறையும்.
திறந்த கதவுகளைத் தாங்கிய பக்கவாட்டுச் சுவர்களின்மேல்
என் சார்லியின் வாசனையை
உதிர்த்துவிட்டுச் சென்றிருப்பேன் .
நான் வந்து சென்றதற்கான அடையாளங்களை
அதன் மூலம் அறிந்துவிடு.

""இன்னும் என்னை யார் என்றுதானே
யோசிக்கிறாய் .
உன் அயர்ச்சியை
வருடும் இளந்தென்றலுக்கு
பொருளுண்டா பெயருண்டா.
உருதான் உண்டா.
ஆனா உசுரு இருக்குதானே.
ஒரு மயிலிறகால்
என்றாவது
உன் முகம் தழுவுற முதல் நொடி,
சட்டென்றுத் தோன்றி மறையும்
குளிர்காலமெனவோ,
அதைத் தாண்டி
அடி எடுத்து வைக்கிற வசந்தகாலமெனவோ கருதிக் கொள்""

தீரா நட்புக்கு, நண்பனின் பிறந்தநாள் ஆசிளும் பிரார்த்தனைகளும்.

பைராகி

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராகி (20-May-25, 3:35 am)
பார்வை : 35

மேலே