வெகு விரைவில்
இயற்கையின் சீற்றங்கள்
மும்முரம்
மனிதனின் போராட்டங்களும் மும்முரம்
எது எப்படி முனைந்தாலும்
மனிதனால் இயற்கையை]
வெல்ல முடியாது
முயற்சியும் அவனதே
மாற்றமும் அவனதே
எங்கு பார்த்தாலும் கோர தாண்டவம்
இயற்கையின் மாற்றத்தில்,,
அமைதியான அழகிய நாடெல்லாம்
பொலிவின்றி போகின்றது
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கின்ற
வேறுபாடு காணமுடியாத காலம்
நெருங்கி விட்டது,
அனைவரும் அன்புடன் பண்புடன்
வாழும் காலம் வெகு விரைவில்..