கூடி வாழுங்கடி
மனசு மலர்ந்ததடி
மலிகைப்பூ வாசமடி
வீசும் தென்றலோடு
விழிஇரண்டும் பேசுதடி
காலை நேரத்திலே
காகங்கள் கரையுதடி
சோலையின் அழகினிலே
சோகங்கள் மறையுதடி
மார்கழி மாதத்திலே
மாக்கோலம் வாசலிலே
மங்கையர் மனமெல்லாம்
கங்கையென பொங்குதடி
வாழையடி வாழையென
வளர்கின்ற தலைமுறையும்
கோயில் பூஜையிலே
கும்பிட்டு வணங்குதடி
அன்பென்ற அருமருந்து
அகத்தினிலே வேண்டுமடி
பொல்லாத எண்ணங்களை
புதைகுழியில் வீசுங்கடி
நிலவிலும் கறையுண்டு
நினைவிலிதை கொள்ளுங்கடி
உறவினை குறைசொல்லும்
உள்ளத்தை மாற்றுங்கடி
நெருங்கிய உறவோடு
நித்தம்கூடி வாழுங்கடி
கூடி வாழ்வோர்க்கே
கோடிநன்மை சேருமடி.
பாவலர்.பாஸ்கரன்

