ஆஞ்சல் பாஞ்சல்

டேய் பங்காளி பர்கேஷு நம்ம இரண்டு


பேருக்கும் ஒரே வயது. நல்வாய்ப்பாக

இரண்டு பேரும் ஒரே குடும்பத்தில் பெண்

பார்த்து நம்ம திருமணம் ஒரே நாளில் ஒரே

மேடையில் நடந்தது. நீ மூத்த பெண்ணைத்

திருமணம் பண்ணீட்ட. அவள் தங்கை என்

மனைவி ஆனாள்.

@@@@@@@@

இதையெல்லாம் எதுக்குடா பங்காளி

பதுக்கேஷு இப்பச் சொல்லற?

@@@@@@@

நல்வாய்ப்பாக ஒரே நாளில் நீயும் நானும்

தந்தை ஆனோம். எந் மனைவிக்குப் பெண்

குழந்தை. உன் மனைவிக்கு ஆண்

குழந்தை. என் குழந்தைக்கு உலகத் தமிழர்

யாரும் கனவிலும் நினைச்சுப் பார்க்க

முடியாத பேரை வச்சிருக்கிறேன்.

@@@@@@@

அந்தப் பேரைச் சொல்லுடா பங்காளி.

@@@@@@@

ஆஞ்சல். அருமையான, அழகான,


சுவீட்டான இந்திப் பேரு. அந்தப்

பேருக்கான அர்த்தம் எனக்குத் தெரியும்.

ஆனால் அதை யாருக்கும்

சொல்லமாட்டேன்.

@@@@@@@

என்னை இளிச்சவாயன்னு

நேனைச்சயாடா பங்கு. உன் பெண்

குழந்தை 'ஆஞ்சல்'. என் ஆண் குழந்தை

'பாஞ்சல்'. இப்ப என்னடா சொல்லற? என்

பையன் பேரு சாமி பேரு. அது உனக்குத்

தெரியுமா? உலகத் தமிழர் யாரும்

இதுவரை கேள்விப்படாத பேருடா பங்காளி.

@@@@@@@

(பொருமிட்டு) உம் இருக்கட்டும்.

@@@@@@@
Aanchal = Shelter, Protective Shelter

Paanchal = Lord Shiva

எழுதியவர் : மலர் (4-Jun-25, 10:27 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 5

மேலே