கஞ்சா கஞ்சா
கஞ்சா, கஞ்சா
#############
"கஞ்சா, கஞ்சா" என்று ஒரு பெண்
சத்தமாகச் சொல்கிறார். அந்த வழியாகச்
சென்று கொண்டிருந்த காவலர் இருவர்
'கஞ்சா' என்ற சொல்லை இரண்டு முறை
கேட்டதும் அதிர்ச்சி அடைகின்றனர்:
என்ன ஐயா நம்ம காவல் எல்லைக்குள்ள
கஞ்சா விற்பனை நடக்கும்.போல
தெரியுது. துணிச்சலா ஒரு பெண்
'கஞ்சா'னு சத்தமாச் சொல்லுது.
செல்பேசில யாருகிட்டயோ கஞ்சாக்
கொண்டு வரச்சொல்லியோ அல்லது வந்து
எடுத்துக்கச் சொல்லியோ தகவல் சொல்லி
இருப்பாங்க போலிருக்குது. இந்த வீட்டைச்
சோதனை போடணும்
@@@@@
நாம இரண்டு பேர் என்ன சோதனை போட
முடியும்? ஆய்வாளர் ஐயாவுக்கு உடனே
தகவல் கொடுப்போம்.
(செல்பேசியில் தகவல் பறக்கிறது)
ஐந்து நிமிடங்களில் ஆய்வாளரின் ஜீப்பும்
ஒரு லாரி நிறைய வந்த அதிரடிப்படை
காவலர்கள் வந்து இறங்குகிறார்கள்.
@@@@@@@
யோ கர்னேஷ் போய் அழைப்பு மணியை
அமுக்கு.
கர்னேஷ் என்ற தலைமைக் காவலர்
ஆய்வாளர் ஆர்னேஷ் சொன்னபடி
செய்யகிறார்.
உடனே ஒரு முப்பது வயதுப் பெண
கதவைத் திறக்கிறார்.
@@@@@@@@
எவ்வளவு நாள் இந்த வியாபாரம் நடக்குது?
@@@@@@
என்ன வியாபாரமுங்க ஐயா?
@@@@@
போதைப் பொருள் வியாபாரம்.
@@@@@@@@
எங்க வீட்டில் புகைப்பிடிக்கிறவங்க கூட
யாரும் இல்லீங்க ஐயா.
@@@@@@
அப்ப. விற்பனை தான் நடக்குதா?
@@@@@@
நீங்க என்ன சொல்லறீங்கன்னே
புரியலீங்க ஐயா.
@@@@@@
இப்ப வீட்டிலே யார் யார் இருக்கறீங்க?
@@@@@@
நான், என் மாமனார், என் ஐந்து வயது
மகள்.
என் கணவர் வேலைக்குப்
போயிருக்கிறார்.
@@@@@@@
சரக்கு ஏத்திட்டு வர்றதுக்கா?
@@@@@@@
இல்லைங்க ஐயா. சரக்கை லாரிகளில்
ஏத்தி அனுப்பற வேலை.
@@@@@@
அப்ப டன் கணக்கில் நடக்கிற வியாபாரம்
போல இருக்குது. அது உங்க சொந்த
நிறுவனமா?
@@@@@@
இல்லீங்க ஐயா. கோயம்பேடு மொத்த
வியாபாரி ஒருத்தரோட குடோனில் இருந்து
சென்னை மாநகரின் பல
வியாபாரிகளுக்கும் சரக்கை அனுப்பி
வைக்கிற வேலை. அங்கே என்
கணவருக்கு மேலாளர் வேலைங்க ஐயா.
@@@@@@@
வீட்டிலே எத்தனை மூட்டை
வச்சிருக்கிறீங்க?
@@@@@@
இருபத்தியைந்து கிலோ. நேத்துத்தான்
வந்ததுங்க ஐயா.
@@@@@@@@
இனிமேல் பேசிட்டு இருக்கிறதிலே அர்த்தம்
இல்லை. எல்லோரும் உள்ளே போயி
மூலை முடுக்கு இல்லாம தேடுங்க.
(பத்து நிமிடத் தேடுதலுக்குப் பிறகு
அதிரடிப் படை வீரர் ஒருவர் ஒரு சிறு
மூட்டையைத் தூக்கிக் கொண்டு
வருகிறார். பிரித்துப் பார்த்தால் அது அரிசி)
@@@@@@
இதைத் தான் ஐயா நான்
இருப்பத்தியைந்து கிலோ மூட்டை நேத்து
வந்ததுன்னு சொன்னேன்.
@@@@@@@
சரி, கஞ்சா, கஞ்சானு யாருகிட்டச்
சொல்லிட்டு இருந்தீங்க.
@@@@@@
இதோ இங்க நிக்கிறாளே என் பொண்ணு,
அவள் பேரு தான் 'கஞ்சா' அருமையான
இந்திப் பேருங்க. அவளைத் தான் 'கஞ்சா,
கஞ்சா'னு கூப்பிட்டேன்.
@@@@@@
ஏம்மா இந்திப் பேரு வைக்கிறது தான் நம்
தமிழர் நாகரிகம். ஆனால் இந்த மாதிரி
'கஞ்சா'ங்கிற குழப்பமான பேரை வச்சு
அதிரடிப் படையை எல்லாம் வர
வச்சுட்டீங்களே. உங்க தெருவில்
இருக்கிறவங்க யாராவது செல்பேசில
படம் எடுத்து இணையத் தளங்களில்
போட்டா காவல் துறையின் மானமும்
காத்துல பறக்கப் போகுது.
@@@@@@
(ஆய்வாளரின் செல்பேசி அலற): வணக்கம்
ஐயா நான் ஆர்னேஷ் பேசறனுங்க. "அது
தெரிதுய்யா. உங்க கஞ்சா வேட்டை பற்றி
ஐஜி வரைக்கும் தகவல் போயிருச்சு. உங்க
கஞ்சா வேட்டை பற்றி
உள்துறைச் செயலாளர் போட்டுக்
கொடையறாராம். எதிர்கட்சித் தலைவர்
பல குற்றச்சாட்டுகளைச் சொல்லறாராம்.
இனி முதல்வரும் சும்மா விடமாட்டார்.
ஒன்னுக்கும் உதவாத அந்த விசயத்தை
அந்த இரண்டு காவலர்களே விசாரிச்சு
உண்மையைத் தெரிஞ்சிருந்தா விசயம
இவ்வளவு பெரிசாகியிருக்காது. ஆர்னேஷ்
உம்மை எங்க தூக்கி அடிப்பாங்களோ.
என்னால் தடுக்க முடியாது.
@@@@@@@
ஐயா, இவ்வளவு நேரம் யாருகிட்டப்
பேசிட்டு இருந்தீங்க.
@@@@@
யோ கர்னேஷ், மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் தான்.
போச்சு. நம்மளக் கூண்டோட தூக்கி
அடிக்கப் போறாங்க. அதிரடிப் படை
வீரர்களுக்குப் பிரச்சனை இல்லை.
நமக்குத் தான் அதிர்வேட்டு. எல்லாம்
'கஞ்சா'ங்கிற அந்தப் பேரால வந்த வினை.
@@@@@@@@@@####@@@@@@@@@@@@@@
Kanja = Bird. Female name.