பேரை மாத்து

செல்வாக்கு இல்லாத ஒரு பணக்காரக்

கட்சித் தலைவரிடம்:

ஐயா நான் உங்க எதிர்கட்சில செய்தித்

தொடர்பாளரா இருக்கிறேன். அந்தக்

கட்சிலே ரொம்பக் குறைவாச் சம்பளம்

தர்றாங்க.

உங்க கட்சியப் பத்தி எந்தக் குற்றச்

சாட்டைச் சாட்டைச் சொன்னாலும்

தரவுகளோடு செல்லவேண்டிய கட்டாயம்.

பொய்த் தகவலைக் கூறக்கூடாதுன்னு


கட்டுப்பாடு. அதுக்குத் தான் உங்க கட்சில

செய்தித் தொடர்பாளர் வேலைக்கு

வந்திருக்கிறேன்.

#########

சரி தம்பி உன் பேரு என்ன?

@@@@@@@

என் பெயர் தமிழ்ச் செல்வன்.

@@@@@@@

தம்பி எங்க கட்சில பாதித் தமிழ்ப் பேரும்


பாதி இந்திப் பேரும் இருக்கணும். முதலில்

உன் பேரை 'தமிழ் செல்வரேஷ்'னு


மாத்திக்க. நாங்க அச்சடிச்சுக் குடுக்கறது

அல்லது செல்பேசில நாங்க அனுப்பி

வைக்கிற வதந்தி, பொய்த் தகவல்கள்,

போன்றவற்றைத் திரும்பத் திரும்பக்.கூறி

நம்ம எதிர்க் கட்சிகாரர்களோட செய்தித்

தொடர்பாளர்களைப் பேசவிடாமல்

இடையூறு செய்துட்டே இருக்கணும். எதிர்


கட்சிகள் பற்றித் தரமான பொய்யை நீயே

உருவாக்கிப் பேசினால் ஒரு பொய்க்கு

ஐயாயிரம் ரூபாய் உனக்கு அன்பளிப்பாகக்

கொடுக்கப்படும்.

உனக்கு மாதம்் ஐம்பாதயிரம் சம்பளம். காலைச் சிற்றுண்டி, மதியம் மட்டன் பிரியாணி, வறுவல் இரவு சிக்கன் பிரியாணி, வறுவல். கட்சிக்

காரில் நீ தொலைக்காட்சி செய்தி

நிறுவனங்களும் போகலாம். முதலில்

எங்கள் கட்சியின் நிறுவனர் படத்திற்கு

மாலை அணிவித்து சத்தியம் செய்து சில

உறுதி மொழிக்கூறி அதன்படி நடப்பதாகக்


கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்ய

வேண்டும்.

அதன்பிறகு செய்தித் தொடர்பாளரா

உனக்குப்

பதவிப் பிரமாணம் செய்து வைப்பேன்.

இன்று விவாதிக்க வேண்டிய பொய்கள்,

வதந்திகள் தயார். உன் செல்பேசியைப்

பார்.

இதோ அவற்றின் அச்சுப் பிரதி எடுத்துக்


கொள். பின் அறையில் மட்டன் பிரியாணி

சாப்பிட்டுவிட்டு பிரபல அகசக செய்தித்

தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து உன

திறமையைக் காட்டிடு வா தமிழ்

செல்வரேஷ்.

@@@##

நன்றி ஐயா.

எழுதியவர் : மலர் (7-Jun-25, 10:13 am)
சேர்த்தது : மலர்91
Tanglish : perai maadthu
பார்வை : 13

மேலே