என்னவள்

நிலவின் தண்ணொளி நீ
மாமலர் தாமரையின் சுகந்தம் நீ
கற்பு எனில் தீயின் வெம்மை நீ
எழிலில் கல்லின் மாணிக்கம் நீ
பேசினால் சொல்லின் அலங்காரம் நீ
மாசிலா தங்கப் பதுமையடி நீ
என் மனது திரையை நீக்கினால்
அங்கு காட்சி தருவது
என்றும் எழில் தரும் உன் உருவமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (8-Jun-25, 5:04 pm)
Tanglish : ennaval
பார்வை : 180

மேலே