சாத்தான்-னு கூப்பிட்டா என்ன செய்யறதுங்க

தம்பி தக்ரேஷு நீ உங்க குடும்ப


சோசியரைப்

பார்க்க வந்திருக்கிறன்னா ஏதாவது நல்ல


தகவல் இருக்கும்.


@@@@@@

ஆமாங்க சோசியர் ஐயா. திருமணம் ஆகி


அஞ்சு வருசம் கழிச்சு என் மனைவி


நவுஜ்ராணிக்கு ஆண் குழந்தை

பிறந்திருக்குதுங்க.

இன்று காலை அஞ்சு மணிக்குப்

பிறந்ததுங்க.

@@@@@@@@

சூரியன் உதிக்கிறதுக்கு முன்னால்,

இருட்டா இருக்கும் போது பிறக்கிற


குழந்தைகள் எப்பவுமே வசதியான

வாழ்க்கை வாழப் பிறந்தவங்க.

புத்திசாலித்தனமா நடந்தா டாடா, அதானி,

அம்பானி மாதிரி பெரும் செல்வந்தர்களா

தொழிலதிபர்களா வாழ்வாங்க


@@@@@@@@@

நீங்க சொல்லறதைக் கேட்கவே ரொம்ப


மகிழ்ச்சியா இருக்குதுங்க சொசியர் ஐயா.


நீங்களே என்ற பையன் இராசிக்கேத்த


பேரா வச்சிடுங்க சோசியர் ஐயா.


@@@@@@@

உங்க பையன் இராசிப்படி அவனுக்கு


சைத்தன்யா-ங்கிற பேரை வைக்கணும்.

ஆனால் அந்தப் பேருல உங்க பையன்

இராசிப்படி ஒரு சிக்கல் இருக்குது.


@@@@@@@@

என்ன சிக்கலுங்க சோசியர் ஐயா.

@@@@@@@

பையன் நல்லாப் படிப்பான். வெளிநாட்டு

வேலைக்குக் கூடப் போவான். ஆனா

அவனுக்கு திருமணம் ஆக வாய்ப்பில்லை.

@@@@@@

என்னங்க சோசியர் ஐயா இப்படி ஒரு

பெரிய குண்டைத் தூக்கிப் போடறீங்க.

@@@@@@@

எந்தப் பேரை வச்சாலும் திருமண இராசி


உம் பையனுக்கு இல்லை. அவனோட


திருமணப் பேச்சை எடுத்தாலே சனி

பகவான் அதுக்குத் தடையா நிக்கறாரு.

அதை உடைக்கத் தான் உம் பையனுக்குச்

சைத்தன்யா -ங்கிற பேரை வைக்கச்

சொன்னேன். ஏழரை நாட்டுச் சனி உம்


பையனைத் தொடராம இருக்கும்னுன்னா

அவனுக்குச் சைத்தைன்யா -ன்னு பேரு

வச்சு அந்தப் பேரில் உள்ள கடைசி எழுத்து


'யா'வைத் தூக்கிட்டு அவனுக்குச் சைத்தன்-

னு அவன் பேரை மாத்திடணும். அப்படி

மாற்றம் செய்தால் அமெரிக்கத்


தொழிலதிபர் எலான் மாஸ்க்-கையே


தூக்கி அடிக்கும் அளவுக்கு உன் மகன்


அமெரிக்கா போயி பெரிய தொழிலதிபர்

ஆயிடுவான்.

@@@@@@@

ஐயா என்ற மகன் பேரைச் சைத்தன்-னு

வச்சா நம்ம சனங்க அவனைச்

சைத்தான்-னு கூப்புடுவாங்களே என்ன

செய்யறதுங்க.

@@@@@@

சைத்தன் இந்திப் பேருன்னு சொன்னாப்


போதும் நம்ம சனங்க "சைத்தன் சுவீட்டு

நேமு"னு பாராட்டுவாங்க.

@@@@@@@@

ஆமாங்க சோசியர் ஐயா, எனக்கு இந்த

உண்மை மறந்து போச்சுங்க. சரிங்க


வைத்தியர் ஐயா நான் வர்றேனுங்க.

@@@@@@@

ஒரு மூட்டை நெல் அனுப்பி வை.

மறந்தறாத.

எழுதியவர் : மலர் (10-Jun-25, 7:46 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 18

மேலே