முதியோர் இல்ல நிர்வாகி சோபியா
சமூக சேவகி சோபியா மேரி
முதியோர் இல்லத்தில் இருந்து ஒரு தாய் பேசுகிறாள்
முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி
ஏழை பிள்ளைக்கு உணவளித்தான் ஓரி
எரியும் வயிற்றுக்கு உணவானது பூரி
இவர்
நடக்கும்போதெல்லாம் சிங்கம் வருகிறது சீரி
இவரின் பிறப்பால் பெருமை அடைந்தது பாண்டிச்சேரி
இவரின் பாசத்தில் எரிமலை நெருப்பும் போகிறது ஆரி
மாற்றுத்திறனாளிகளுக்கு அள்ளிக் கொடுப்பதில் இவரோ ஒரு காரி
பிள்ளைகள் கைவிட்ட முதியோர்களுக்கு இவர்தான் கேரி
இவர் முதியோர் மீது அன்பு மழை பொழியும் மாரி
இவருக்கு இருந்தா பிடிக்கும் நல்ல மாறி
இவரிடம் பணம் வாங்கி ஏமாற்றிக் கொண்டிருக்கிறான் ஒரு மொள்ளமாரி
அந்த நல்ல இதயத்தின் பெயர் தான் சோபியா மேரி
எங்கள் பிள்ளைகளோ எங்களை பள்ளத்தில் வைத்தனர் கண்ணீர் மழை வெள்ளத்தில் வைத்தனர் இறுதியாய் இந்த இல்லத்தில் வைத்தனர்
இந்த அன்னை தான் எங்களை அவரின் உள்ளத்தில் வைத்தார்
அன்னை இல்லாத எங்களுக்கு இவர் தான் அன்னை தெரசா
இவர் நைட்டு நேரத்திலும்
எங்களுக்கு சேவை செய்யும் நைட்டிங்கேல் அம்மையார்
அனைவரும் தலையில் சூடுவது பூவை
இவர் சூடுவதோ சேவை
கோயம்புத்தூருக்கு மறு பெயர் கோவை
பெண்ணுக்கு மறு பெயர் பாவை
பாவப்பட்ட பெண்களுக்கு உதவி செய்ய இப் புதுவைக்கு சோபியா மேரி அவர்கள் தேவை
மூப்படைந்து யாராவது இறந்து விட்டால்
தன் சொந்த செலவில் முன் நின்று எடுத்துப் போடுகிறார் அவர் சாவை
இவருடைய தம்பி மனைவிக்கு மட்டும் தான் இவர் அண்ணி
எங்களுக்கு இவர் அன்னிபெசன்ட் அம்மையார்
இளமையில் முழுவதும் நாங்கள் பாயோடு படுத்துக் கொண்டிருந்தோம்
முதுமையில் தான் நாங்கள் கஸ்தூரி பாயோடு படுத்துக் கொண்டிருக்கிறோம்
நாங்கள் நோயோடு இருக்கும் துன்பத்தை சோபியா மேரி எனும் தாயோடு இருக்கும் இன்பம் மறைத்துக் கொள்கிறது.
சோபியா உன்னை நினைக்கும் போதெல்லாம் எங்கள் நெஞ்சம் இனிக்கிறது
கருப்பட்டி காபியா
நீ அன்பால் எங்கள் மனதை கொள்ளை கொண்ட மாபியா
கண்மணியே பொன்மணியே என்றெல்லாம் உனைக் கொஞ்ச வேண்டும்
போது சேவையிலே
மந்திரியை நீ மிஞ்ச வேண்டும்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
நீ வெல்ல வேண்டும்
ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் நீ
தள்ள வேண்டும்
தேர்தல் வரும்
காலம் வரும்
மனம் கொள்ள வேண்டும்
வெற்றி பெற்று
சட்டமன்றம் நீ
செல்ல வேண்டும்