மழையெனும் வள்ளல்

பொன் விளையும் பூமியெல்லாம்
பூத்துக் குலுங்கும் பொற்காலம்
பச்சைப்பசும் போர்வையினால்
கண்கொள்ளா காட்சியினை
தந்து நிற்கும் பாரெங்கும் மழை

இந்த நிலை நிலைத்திடத் தான்
விரும்புகின்றோம் எந்நாளும்
மழையின்றி நீரில்லை
மரமில்லை செடியில்லை
பயிரில்லை பாரினிலே

எவ்வுயிரும் உயிர் வாழ வழியுண்டு
மழையெனும் வள்ளல்தன்னாலே /
வள்ளலவன் கொடையாலே
இறைவன் படைப்பில் எண்ணிலடங்கா
அதிசயங்களில் மழை முதன்மையானது

எழுதியவர் : (16-Jun-25, 12:43 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 54

மேலே