திருக்குறள் கிறித்துவ நூல் இல்லை 1 1
திருக்குறள் கிறித்துவ நூல் - இல்லை !
- யாதுமறியான் .
1- அருளற்றவரா இயேசு கிறித்து . ?
×××
மனிதர்களின் அடிப்படையான தேவைகளில் முக்கியமானது உணவு . உண்ணும் உணவின் அடிப்படையில் , மனிதர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம் . தாவர உணவுகளை மட்டுமே உண்டு வாழ்பவர்கள் மற்றும் தாவர உணவுகளோடு இறைச்சி அல்லது புலால் உணவுகளையும் உண்டு வாழ்பவர்கள் ,
புலால் உணவுகளை மட்டுமே உண்டு வாழும் எஸ்கிமோக்கள் எனும் ஒர் இனம் வடதுருவப் (ஆர்டிக்) பிரதேசங்களில் வாழ்கிறார்கள் . அவர்களும் கூட தாவர உணவுகளை மறுப்பவர்கள் அல்ல. தாவர உணவுகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்பதே உண்மை .
திருவள்ளுவர் திருக்குறளில் புலால் உணவு உண்பதைக் கடுமையாக எதிர்க்கிறார் . புலால் மறுத்தல் என ஓர் அதிகாரமே படைத்துள்ளார் .
தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றொரு உயிரின் உடம்பை தின்கின்றவன் எவ்வாறு அருளுடைவனாக இருக்க முடியும் ?
எனப் புலால் மறுத்தல் அதிகாரத்தின் முதல் குறளிலேயே வினா தொடுக்கிறார் திருவள்ளுவர் .
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுன்பான்
எங்கனம் ஆளும் அருள்
- குறள் : 251 .
மேலும் , அருளுடையவராக இருக்கும் சிறப்பு , புலால் உண்பவர்க்கு இல்லை என்றும் திருவள்ளுவர் கூறுகிறார். ( குறள் : 252 ) அதுமட்டுமல்ல ஊன் - புலால் உண்டால் நரகம் அவனை வெளியே விடாது என்றும் எச்சரிக்கின்றார் .
இப்போது , இயேசு கிறித்து புலால் உண்ணுதலைப் பற்றி என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார் எனப் பார்ப்போம் .