பையன் பேரு பாட்டி

ஆரம்பப் ப்ள்ளி மாணவர் சேர்க்கை:
ஐயா அடுத்தது நீங்க. பையனைக் கூட்டிட்டு
உள்ள போங்க.
@@@@@@
தலைமை ஆசிரியர் அறையில்:
வணக்கம் ஐயா.
@@@@@@
இரண்டு பேரும் உட்காருங்க. பையனோட
பிறப்புச் சான்றிதழைக் கொடுங்க.
@@@@@@@
பையன் பேரு 'பாட்டி'. என்னங்க
பையனுக்குப் 'பாட்டி'ன்னு பேரு
வச்சிருக்கிறீங்க?
@@@@@@@
ஐயா, உங்க பள்ளில தமிழ்ப் பேருள்ள
பிள்ளைகளைச் சேர்த்துக்கிறதில்லைனு
சொன்னாங்க.
@@@@@@
ஆமாம். அது உண்மை தான்.
@@@@@@@@
அதுக்குத் தான் எங்க பையனுக்கு இந்திப்
பேரை வச்சிருக்கிறோம்.
@@@@@@@
'பாட்டி' தமிழ்ச் சொல் ஆச்சே.
@@@@@@@
ஐயா, போன வாரம் ஆங்கில நாளிதழில்
ஒரு தொழில் அதிபரின் பெயரைப்
பார்த்தோம். அந்தப் பேரு 'பாட்டி'
(Bhatti)ன்னு தான் முடியுது. அந்தப் பாட்டி
இந்திப் பேரு தானே.
@@@@@@
ஆமாம், ஆமாம். சரி உங்க பையனை
'பாட்டி'யை எங்கள் பள்ளியில்
சேர்த்துக்கிறோம். இந்த்ப் பதிவேட்டில்
தாய், தந்தை இருவரும் கையொப்பம்
இடுங்கள்.
@@@@@@@
துள்சிங்கம் இந்தப் பையனை முதல்
வகுப்பு ஈ பிரிவில் விட்டுட்டு வா.
@@@@@@
சரி நீங்கள் இருவரும் போகலாம்.
@@@@@@@
நன்றி ஐயா, 'பாட்டி'யை நல்லாப்
பார்த்துக்குங்க ஐயா.