வெல்வது உறுதி

வ. மு. க (வளர்ச்சி முன்னேற்றக் கட்சி)யின்
செய்தித் தொடர்பாளர் கூட்டம்:
"செய்வது எளிது என்றாலும் வெல்வது
உறுதி"
இது தான் நமது வளர்ச்சி முன்னேற்றக்
கட்சியின் கொள்கை.
@@@@@@
தலைவரே நம்ம கட்சிக் கொள்கை கேட்க
இனிமையா இருக்குது. ஆனால் ஒன்னும்
புரியலிங்களே!
@@@@@@@
நம்மை எதிர்க்கும் கட்சிகளுக்கும் நம்ம
கொள்கை புரியாது.
@@@@@@
கொஞ்சம் விளக்கமாச சொல்லுங்க
தலைவரே.
@@@@@@
சொல்லறேன். சொல்வது எளிது:
புலன(வாட்சப்)க் குழுக்களின் மூலம்
நம்ம எதிர்கட்சிகள் பற்றி வதந்திகளைப்
பரப்புவது எளிதான செயல். நம்ம கட்சி
நிதி எத்தனை ஆயிரம் கோடி
இருக்குதுன்னு நம்ம கட்சியின்
பொருளாலருக்கே தெரியாது. வதந்தியைப்
பரப்ப வாரி வழங்குவதே நம்ம தேர்தல்
உத்தி. ஒவ்வொரு சிற்றூரிலும் ஒரு
வதந்தி பரப்பும் புலனக்குழு. பெரிய
ஊர்களில் ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு
புலனக்குழு. வதந்தி புலனக்குழு
நிர்வாகிக்கு மாதம் பத்தாயிரம் சம்பளம்.
அவருடைய வேலை நம்ம கட்சி தலைமை
நிலையத்தில் இருந்து அனுப்பப்படும்
வதந்தி, புரளி, பொய்த் தகவல் பொய்
ஆதாரங்களை அவரது குழுவின் மூலம்
பரப்ப வேண்டும். உள்ளூர் வதந்தி
உருவாக்கத்திற்கு மாவட்டம் தோறும் சில
சிறப்பு வதந்தி நிபுணர்கள் இருப்பார்கள்.
@@@@@@@@
தலைவரே நாம் அனுப்பும் வதந்திகளை
மக்கள் நம்புவார்களா?
@@@@@@
அவர்கள் நம்பும்படியான வதந்திகளை
உருவாக்கத்தான் வெளிநாட்டில் படித்த
சிறப்பு நிபுணர்கள் ஆயிரம் பேரை
நிய்மித்துள்ளோம். வெளிநாடுகளில் நமது
ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில
உள்ளார்கள். அவர்கள் செயற்கை
நுண்ணறிவைப் பயன்படுத்தி
புதுமையான வகையில் நம் வெற்றிக்குத்
தேவையானவற்றைத் தயாரித்து
அனுப்புவார்கள்.
@@@@@@@
தலைவரே வதந்தியை பரப்பினால்
எதிர் கட்சிக்காரர்கள் மானநட்ட வழக்குப்
போட்டால் என்ன செய்வது?
@@@@@@@
அதைப் பற்றி அணுவளவும் கவலைப்படத்
தேவையில்லை. நம் கட்சியின்
வழக்கறிஞர் இருக்கிறார்கள். கைது
செய்தால் பிணையில் (ஜாமீன்)
எடுப்பார்கள். நீதிமன்றத்தில் மன்னிப்புக்
கேட்டால் போதும். விடுதலை செய்ய
வாய்ப்பு உண்டு. அபராதம் கட்ட
உத்தரவிட்டால் அதை நம் கட்சி கட்டிவிடும்.
@@@@@@@
தலைவரே உங்கள் விளக்கத்தைக்
கேட்டவுடன் இப்பவே வெற்றி விழாக்
கொண்டாடுவது போன்ற உண்ர்வு
வருகிறது.
@@@@@@
செய்தித் தொடர்பாளர்கள் ஆன நீங்கள்
உங்களுக்குப் பயிற்சி அளித்தபடி
தொலைக்காட்சி விவாதங்களில் நமது
கொள்கைப்படி வதந்திகளைப் பரப்பி,
பொய்ச் செய்திகளைக் கூறி
எதிர்கட்சிகளின் செய்தித்
தொடர்பாளர்களைப் பேசவிடாமல்
இடையூறு செய்துகொண்டு
சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்க
வேண்டும். அவர்கள் உங்களை மடக்கிப்
பேசினால் நீங்கள் சொன்னதை " நான்
அது போல சொல்லவே இல்லை" என்று
சத்தியம் செய்யவேண்டும்.
@@@@@@@@@
(செய்தித் தொடர்பாளர்கள் அனைவரும்):
தலைவரே சொல்வது எளிது. வெல்வது
உறுதி.