ஆனையென ஆகுமோ ஆடு

ஆனைக் குமேதன் அடிசறுக்கும் பூமியில்
பூனைக் குமேபார் புலிபோல்நீள் மீசையுண்டு
பூனைதான் ஆமோ புலிபோல்வா லாட்டினால்
ஆனையென ஆகுமோ ஆடு

எழுதியவர் : கவின் சாரலன் (24-Jun-25, 4:34 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 15

மேலே