கவாலாக் கார்

கவாலா கார்

டேய் தம்பி, துளசிங்கம்....


@@@@@@

என்ன சூன்யா யக்கா. காலைலயே


செல்லுப் பேசி என்னை எழுப்பி

விட்டுட்டுட்ட?

@@@@@

அட சோம்பேறி நாயே. தொடப்பக்கட்டை.

மணி பத்து ஆகுது. இன்னும் தூங்கறியா?

எங்கடா அம்மாக்காரி?

@@@@@@

பாத்தரங்ககளைத் தேச்சுத் தேச்சுக்

கழுவிட்டு இருக்கிற சத்தம் கேக்குது யக்கா.

@@@@@@

பொழப்புக் கெட்டவ. சும்மா கழுவி வச்சாப்

போதாதா? பாத்தரம் கழுவற நேரத்தைப்

பாரு.

@@@@@@

சரி, எதுக்கு யக்கா எனக்குச் செல்லுப்பேசி


எழுப்பிவிட்ட?


@@@@@

அட கூமட்டை துளசிங்கம் உன்னோட

மாமன், என்னோட வீட்டுக்காரனுக்கு

வெளிநாட்டிலிருந்து மூனு இலட்சம்

பணத்தை யாரோ அனுப்பி இருக்கிறாங்க.

யாருக்கோ சேரவேண்டிய பணத்தை உன்


மாமன் பேருக்கு அனுப்பி இருக்கிறாங்க.

அந்தப் பணத்தை மாமனே அமுக்கிட்டாரு.


அந்தப் பணத்துக்குரிய ஆளு இந்த

மனுசன்கிட்ட கேக்க முடியாதாம். அது

கவாலாப் பணமாம்.

@@@@@@@

கவாலாப் பணம்ன்னா என்ன யக்கா?

@@@@@@@

நான் என்னத்தடா கண்டேன்டா துளசிங்கம்?


நான் (இ)ரண்டாம் வகுப்பு படிச்ச சூன்யா. நீ

அஞ்சாம் வகுப்பு படிச்ச துளசிங்கம்.

உன்னோட மாமன் தான் பெரிய படிப்புப்

படிச்சவரு. பத்தாம் வகுப்பு படிச்சு

முடிச்சவரு. கட்டப் பஞ்சாயத்து பண

விவகாரம் எல்லாம் நல்லாத் தெரிஞ்சவரு.

நாஞ் சொல்ல வந்த விசயத்தையே

மறந்துட்டேன். அந்தக் கவாலாப் பணத்திலெ

ஒரு காரு வாங்கிருக்காரு. அந்தக் கவாலாக் காரை

ஓட்ட உன்னோட உதவி


தேவைடா தம்பி துளசிங்கம்.

எழுதியவர் : மலர் (26-Jun-25, 6:44 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 16

மேலே