கண்ணசைவு தன்னில் கவிஞனின் அப்சரா

புன்னகைப்பூப் பூத்திடும் பூந்தோட்டம் செவ்விதழ்கள்
மென்காற்று பாடுது மெல்லிசை கூந்தலில்
கண்ணசைவு தன்னில் கவிஞனின் அப்சரா
மண்ணிலோர்வான் நட்சத் திரா
புன்னகைப்பூப் பூத்திடும் பூந்தோட்டம் செவ்விதழ்கள்
மென்காற்று பாடுது மெல்லிசை கூந்தலில்
கண்ணசைவு தன்னில் கவிஞனின் அப்சரா
மண்மயங் கும்விழி மான்
யாப்புக் குறிப்புகள் :--
---1 மூன்றாம் சீர் ஓசை கருதி அப்சரா --(நட்சத்)திரா
----மூன்றாம் சீர் மோனை கருதி மண் மான்