பாட்டுக்கு நாயகன் பாமரனின் தாயவன் கண்ணதாசன்

பாட்டுக்கு நாயகன்
பாமரனின் தாயவன் கண்ணதாசன்..!

பொன்மாலைப் பொழுதென் னாளும்
பூரிப்பில் பொங்குதென் காலம்
என்விரலில் நீந்துகின்ற கானம்
இறக்குகிறேன் அதையிங்கு நானும்..!

கவியரசர் பாடலிலே மூழ்கிக்
களித்திருக்கும் காலம் சொர்க்கம்
புவியிதிலே பாடலுக் கரசர்
புரிவாரோ இதற்கே தர்க்கம்..!

முக்காலும் வாழும் கவியை
மூச்சுக்குள் இழுத்து வைத்தேன்
எக்காளம் போட்டுத் தானே
எதிர்நின்ற பாட்டைப்
பிடித்தேன்..!

கேட்டினை யோட்டும் பேயாய்
கிளர்ச்சியில் அவனின் பாட்டு
கேட்டாலே போது மன்றோ
கிழக்கொளி பாயும் வீட்டில்..!

நாற்றங்கால் பாட்டுக்கெல்லாம்
குரலிசையை ஊற்றி
வளர்த்தார்
ஏற்றத்தில் இன்னு மின்னும்
இறங்கிடுமா
சொல்லும் சொல்லும்..!

வற்றாத ஊற்று போலே
வந்ததமிழ் அவனின் பக்கம்
சற்றதைநான் பருகப் பருக
வெற்றுத்தாள் பாட்டினில் சிக்கும்..!

#சொ. சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (1-Jul-25, 10:58 am)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 20

மேலே