தேசத்தின் சுவாசம்
#தேசத்தின் சுவாசம் நீ..
#எண்சீர் விருத்தம்
தேசத்தின் சுவாசத்தைத் திருடிக் கொண்டு
தேகத்தின் வலிமைதனைச் சுரண்டு கின்றார்
மோசந்தான் செய்கிறது முதலைக் கூட்டம்
மூச்சுவாங்கப் போராட்டம் நாளு
மிங்கே
நீசர்கள் அடிமைகளாய் ஆக்கி
நம்மை
நீங்காதத் துயரத்தில் தள்ளி விட்டார்
ஊசலாடும் தேசத்தின் சுவாச மெல்லாம்
உணர்வீர்கள் சுதந்திரமே யதனை மீட்போம். !
-------
#சொ.சாந்தி