கஞ்சன் குஞ்சன்
ஏண்டப்பா எதிலேசு (எதிலேஷ்) உன்ற மனைவி மங்கலானிக்கு
இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாச் சொன்னயே குழந்தைகளும்
உன்ற மனைவியும் நலமா இருக்கறாங்களா?
@@@@@@@
மங்கலானியை செல்பேசிலே போட்டுக்காட்டறன் பாட்டி. நீங்க
அவளை நலம் விசாரிச்சா அவளுக்கு மகிழ்ச்சியா இருக்கும்.
@@@@@@@@@@@
அடியே மங்கலா நீயும் குழந்தைகளும் நல்லா இருக்கிறீங்களா?
@@@@@@
இருக்கிறோம் பாட்டி, இரட்டைக் குழந்தைகள். ஒன்னு ஆண்
ஆண் குழந்தை. இன்னொன்னு பெண் குழந்தை.
@@@@@@@@@@@
நீ கொடுத்து வச்சவடி மங்கலா. சரி குழந்தைகளுக்குப் பேரு
வச்சுட்டீங்களா?
@@@@@
வச்சுட்டோம் பாட்டி. பையன் பேரு ;கஞ்சன். பெண் குழந்தை
பேரு 'குஞ்சன்'.
@@@@@@@@@@@
இந்திப் பேருங்களாத்தான் இருக்கும். குஞ்சன் பையன் பேரு
மாதிரி இருக்குது, அந்தப் பேரைப் பெண் குழந்தைக்கு
வச்சிருக்கிறீங்களே!
@@@@@@@@
இல்லங்க பாட்டி. இந்தில குஞ்சன் பெண் குழந்தைகளுக்கு
வைக்கிற பேரு தான் பாட்டி.
@@@@@@@@@@@
பேரு கெடக்குதடி உடுடி. குழந்தைங்க நல்லா வளர்ந்து படிச்சு
பெரிய பதவிக்கு வரணும் அது தாண்டி முக்கியம் மங்கலா.
@@@@@@@@@@@
உங்கள் வாழ்த்துக்கு நன்றி பாட்டி.
@@@@@@@@@@@@@@@@@@@
கஞ்சன், குஞ்சன். சுவீட்டு நேமுசடி மங்கலா.