மின்னப் போகிறேனா
மின்னப் போகிறேனா?
06 / 07 / 2025
கோடி விண்மீன் பேரடைகள்
உலவும் பேரண்டத்தின்
ஓர் அங்கமாய் சுழலும் - நம்
வாழ்வெனும் பால்வெளியில்
பயணிக்கின்ற சூரியகுடும்பத்தில்
ஒரு துளியாய்.. பாலகன் நான்.
தந்தையாய் சூரியனும்
தாயாய் வெண்ணிலவும்
சுற்றிவரும் கிரங்களாய்
சகோதர சகோதிரிகள்
மாமன் மச்சான்கள்
உற்றார் உறவினர்கள்
உயிர்காக்கும் நண்பர்கள்
என்று.. ஒன்றை ஒன்று
அனுசரித்து அரவணைத்து
சுழலும் சூரியகுடும்பத்தில்….
ஒன்றை ஒன்று உரசாமல்
ஒன்றை ஒன்று மோதாமல்
இருக்கும் வரை பயணம் சுகம்தான்.
மோதிவிட்டாலோ பெரும் இழப்புதான்.
வாழ்வு முடிந்தபின்
எரிகல்லாய்.. துகளாய்..தூசியாய்
பிரபஞ்சத்தில் சுற்றிவரும்
அதிசயம்தான் நம் வாழ்க்கை.
தூசியாய் சிதறப்போகிறேனா? - இல்லை
விண்மீனாய் மின்னப் போகிறேனா?