சளிப்பிடிக்கற பேரு

என்னம்மா எம் பொண்ணுக்கு எப்பப் பார்த்தாலும் சளி, இருமல்.

எந்த மருந்தும் அவளுக்கு ஒத்துக்கறதில்லை. என்ன செய்யறது?

@@@@@

நான் அப்பவே சொன்னேன். சோசியர் பேச்சைக் கேட்டு "அந்தப்

பேரை வைக்காதே"ன்னு சொன்னேன். நல்ல நாள்

பார்த்து மந்திரம் சொல்லி எல்லோரும் வாழ்த்தி திருமணம்

நடத்தி

வைக்கிறாங்க, ஆனால் தொலைக்காட்சி செய்திகளிலும்

செய்தித்தாள்களிலும் மணமுறிவு (விவாகரத்து) பற்றி பல

செய்திகள் நாள்தோறும். சோதிடம் என்ன ஆச்சு? மந்திரங்கள்

என்ன ஆச்சு? சரி என்ற பேத்திக்கு சோதிடர் சொன்ன பேரு

என்னடா மகனே?

@@@@@@@

'அஞ்சலி'ன்னு பேரு வைக்கச் சொன்னார்.


@@@@@@@@@@@

('லி'க்கும் 'ளி'க்கும் உள்ள சரியான உச்சரிப்புத் தெரியாத பாட்டி)

ஏண்டா பேருளேயே 'சளி'. சளி இருந்தா இருமல் வரும். அஞ்சளி.

சளிப்பிடிக்காம என்னடா செய்யும்? நமக்குப் பிடிச்ச நல்ல

இந்திப் பேரா வச்சிருக்கணும். சளிப்பிடிக்கிற பேரை வச்சா

சளிப்பிடிக்காம என்ன செய்யும். உஞ் சளிப் பிள்ளை பேரை

மாத்துடா சடகேசு (சடகேஷ் - தாத்தா பேரு சடையப்பன்)

@@@@@@@@@@@

சரிம்மா. என் மனைவி 'துக்லேஷி'கிட்ட கலந்து பேசி அஞ்சலி

பேரை மாத்தறேன்.

எழுதியவர் : மலர் (14-Jul-25, 11:22 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 25

சிறந்த நகைச்சுவைகள்

மேலே