அடர்ந்த காட்டுக்குள் பயணம்
அடர்ந்த காட்டுக்குள் பயணம்
பச்சை போர்வையால்
அழகாய் போர்த்தி
வைத்திருக்கிறது
இந்த தார் சாலையை
வானத்தில் பறக்கும்
கழுகு பார்வையில்
விரித்து பார்க்க
கண் காணும் வரை
பச்சை புதருக்குள்
கரும் பாம்பாய்
வளைந்து வளைந்து
படுத்து கிடக்கிறது
சாலை பாம்பு
உள்ளில் நுழைந்து
கரும் பாம்பை
தொட்டு பார்க்க
ஆசை
சாலையின் வாலை
தொட்டு
வாகனம் வழியாய்
பயணிக்க
கண் எட்டும்
சாலை முடிவு வரை
பசுமையின் குளுமை
காட்டின் அமைதி
சாலையின் இருபுறமும்
அடர் மரங்கள்
கழுத்தில் தொங்கிய
பதாதைகளுடன்
சாலையில் செல்லும்
பயணியருக்கு விடுக்கும்
எச்சரிக்கை
“வாகனங்களை நிறுத்தி
இறங்காதீர்கள்
விலங்குகள் உலாவும்
இடங்கள்”
பசுமையின் அழகில்
வாகனம் நிறுத்தி
இறங்கி
பார்க்க ஆசை
உயிரின் பயமோ
உடனே கடந்து
விடு என்று
சொல்ல
பல மைல்
பயணித்து காட்டை
கடந்தேன்.

