தமிழ் வளர்ச்சித் துறைக்கு வேண்டுகோள்
இன்றைய தமிழரில் பலர் பேசும் மொழி
கலப்படத் தமிழ். ஒரு வாக்கியம் கூட பிற
மொழிச் சொற்களைக் கலக்காமல்
அவர்களால் பேச முடியவில்லை.
மக்களின் மீது நடத்தப்படும் ஊடகத்
தாக்குதலே இதற்குக் காரணம்.
உச்சரிப்பில் சென்னைத் தமிழை
மெத்தக் கற்றவர்களும் பின்பற்றும் அவல
நிலை. பல்லி சென்னைத் தமிழில் balli.
கொலுசு golusu. கெஞ்சு kenju. இது போன்று
பல சொற்கள் சென்னைத் தமிழ்
உச்சரிப்பின் தாக்குதலுக்கு உள்ளாகி
வருவதை நாம் பார்க்கிறோம்.
1940களில் கிராமப் பகுதிகளில் கதைக்
களத்தை அமைத்துப் படம் எடுத்தார்கள்.
அப்பொதிருந்த சூழலில்
கணவன், மனைவியைக் குறிப்பிட புருசன்,
புருஷன், பொண்டாட்டி, பொஞ்சாதி
போன்ற சொற்களைப்
பயன்படுத்தினார்கள்.
21ஆம் நூற்ராண்டு
திரைக்காட்சிகளில் கதை மாந்தர்கள்
கற்றவர்கள். அவர்களில் பலர் உயர் கல்வி
கற்றவர்கள். இன்னும் புருஷன்,
பொண்டாட்டி போன்ற சொற்களைப்
பயன்படுத்துவது நாம் இன்னும்
1940களிலேயே இருக்கிறோமா என்று
கேட்கத் தோன்றுகிறது. பொண்டாட்டி
என்பதைவிட மனைவி மிகவும் எளிதான
சொல். பொண்டாட்டி ஐந்து எழுத்துக்கள்
கொண்ட சொல். மனைவி மூன்று
எழுத்த்க்கள் உள்ள சொல். புருஷன் என்ற
சொல்லுக்கு நான்கு எழுத்துக்கள்.
கணவன் என்ற சொல்லுக்கும் நான்கு
எழுத்துக்களே.
இன்னும் ஏன் திரை உரையாடல்களில்
'புருஷன், பொண்டாட்டி'யைப்
பயன்படுத்துகிறார்கள். உரையாடல்களை
எழுதுபவர்கள், இயக்குனர்கள், நடிகர்
நடிகைகள் அனைவருமே தமிழுணர்வு,
போதிய தமிழறிவு இல்லாதவர்களா என்று
ஐயப்படத் தோன்றுகிறது.
தமிழ்நாடு அரசின் தமிழ்
வளர்ச்சித்துறை என்ன செய்கிறது? இதை
அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல
வேண்டும்.
சட்டமன்றத்தில் யாராவது ஒரு
உறுப்பினர் இது பற்றிப் பேசினால் தான்
திரை உரையாடல்களில் நல்ல தமிழைப்
பயன்படுத்தும் நிலை ஏற்படும். நல்ல
தமிழைப் பயன்படுத்தும் படங்களுக்கு
வரிச்சலுகை அளிக்க வேண்டும்.

