காமி
பல வருசம் தவமிருந்து என் மனைவிக்கு
ஆண் குழந்தை பிறந்திருக்குது. என்ன
பேரு வைக்கிறதுன்னு தெரியலய
தமிழில் அழகான பேருங்க
ஆயிரக்கணக்கில் இருந்தாலும் என்ன
பயன். தமிழ்ப் பேரை வச்சா மரியாதை
இல்லை. இந்திப் பேரு மாதிரியே உள்ள
பேருங்கள உருவாக்கி வச்சுருக்கிறதான்
பெருமைக்குரியதா இருக்குது.
@@@@@@@@
அது மட்டுமா தாய் நாட்டில் வேலை
பார்க்கிறதைவிட அந்நிய நாட்டில் வேலை
பார்க்கிறவங்களுக்குத் தான் மரியாதை
அதிகம்.
@@@@@@
சரி, சரி. பையனுக்கு என்ன பேரு
வைக்கலாம்?
@@@@@@
தொலைக்காட்சி செய்தில 'தாமி' -ன்னு
முடியற ஒரு பேரைச் சொன்னாங்க. நாம
அந்தப் பேரையே பையனுக்கு
வச்சிட்லாமா?
@@@@@@
வேண்டாம். வேண்டாம். யாரும் அவுங்க
பையனுக்கு வைக்காத பேரை வைக்கிறது
தான் அறிவுடமை. நாம 'தாமி' மாதிரி
வேற பேரை வைக்கிறது தான் நமக்குப்
பெருமை. நம்ம பையன் பிறந்த இந்த
ஐந்தாவது நாளிலிருந்து 'காமி, காமி, காமி'
அழகான இந்திப் பேரு மாதிரியே
இருக்குது.
@@@@@@
'காமி' அருமையான இந்திப் பேருன்னு
சொன்னாப் போதும் நம்ம தமிழ் மக்கள்,
"காமி அருமையான ஸ்வீட் நேம்" -ன்ன்னு
பாராட்டுவாங்க. நம்ம ஊர் மக்களும்
நம்ம பையன் பேரிலே மயங்கி இனி
அவுங்களுக்குப் பிறக்கிற
குழந்தைகளுக்கு 'பாமி, நாமி, ஞாமி' மாதிரி
பேருங்களை உருவாக்கிடுவாங்க.

