முத்தொள்ளாயிரம் சேரன் 23 நேரிசை வெண்பா

முத்தொள்ளாயிரம்
சேரன்
நேரிசை வெண்பா

வேரறுகை பம்பிச் சுரைபடர்ந்து வேளைபூத்(து)
ஊரறிய லாகா கிடந்தனவே - போரின்
முகையவிழ்தார்க் கோதை முசிறியார் கோமான்
நகையிலைவேல் காய்த்தினார் நாடு! 23

பொருளுரை:

இதுவும் பகைவர் நாட்டின் அவலம் கூறியவாறு.

மொட்டவிழ்ந்த மலர்மாலை யணிந்தவனும் முசிறி நகர மக்களின் தலைவனும் ஆன சேரனது ஒளிபடைத்த இலைவடிவ வேலால் போரின்கண் துன்புறுத்தப்பட்ட பகைவரின் நாடு, வேரோடிய அறுகம்புல் அடர்ந்து, எங்கும் சுரைக்கொடிகள் படர்ந்து, வேளைக்கீரைகள் பூத்து, ஊர்கள் இருந்த இடங்கள் இவை என்றறிய இயலாதவாறு பாழ்பட்டுக் கிடந்தன.

அறுகை - அறுகம்புல்; பம்பி - புதிராக அடர்ந்து; வேளை - காட்டுக்கீரை;
முசிறி - சேர நாட்டுத் துறைமுக நகரம்.

எழுதியவர் : பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை (14-Aug-25, 12:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே