உனக்காகவே வாழ்வாய்
உனக்காகவே வாழ்வாய்..!
04 / 10 / 2025
பற்றற்று இரு..
தாமரை இல்லை நீர்போல
பட்டும் படாமலும் இரு.
எதிர்வினை ஆற்றுவதை
நிறுத்திவிடு
பின்பற்றி ஓடுவதை
நிறுத்திவிடு
கையேந்தி கெஞ்சுவதை
நிறுத்திவிடு
விளக்கவுரை கொடுப்பதை
கட்டாயப்படுத்துவதையும்
விட்டுவிடு.
எல்லாவற்றையும் விட்டுவிட்டால்
எல்லாவற்றையும் நிறுத்திவிட்டால்
உனக்கான வாழ்வை
உனக்காக..
உனக்காக மட்டும்
நிம்மதியோடும் - மன
நிறைவோடும்
உனக்காகவே வாழ்வாய்
உனக்காக மட்டும்

