வான் பறவையும் மண் மனிதனும் கவிஞர் இரா இரவி
வான் பறவையும்! மண் மனிதனும்! கவிஞர் இரா. இரவி !
காகம் உணவைக் கண்டவுடன்
கரைந்து அழைத்து கூடி உண்கின்றன !
மனிதன் உணவைக் கண்டவுடன்
மறைத்து வைத்து தனியே உண்கிறான் !
வான் பறவை வானில் பறக்க முடியும்
மண் மனிதனால் வானில் பறக்க முடியாது !
குருவி கட்டும் கூட்டினைப் போல
கற்றறிந்த பொறியாளர் கூட கட்ட முடியாது !
தேனீக்களால் தான் தேன் சேர்க்க முடியும்
மனிதனால் தேனை அபகரிக்கவே முடியும் !
வான்பறவை பறப்பதை உற்றுநோக்கியே
மண் மனிதன் விமானம் கண்டுபிடித்தான் !
இணைப் பறவைகள் சேர்ந்தே பறக்கும்
இணை இறந்தால் துணையும் இறந்து விடும் !
மண்மனிதன் மனைவி இறந்து விட்டால்
மறுமாதமே மறுமணம் செய்து விடுவான் !
வான்பறவை பறந்து இரை தேடி உண்கின்றன
மண்மனிதன் உழைக்காமல் உட்கார்ந்து உண்கிறான் !
வான்பறவை அஃறிணையா? உயர்திணையா?
மண்மனிதன் உயர்திணையா? அஃறிணையா?

