வறுமை நிரந்தரமன்று கவிஞர் இரா இரவி
வறுமை நிரந்தரமன்று ! கவிஞர் இரா. இரவி !
ஏழையாகப் பிறப்பது உன் தவறு அல்ல
ஏழையாகவே வாழ்வது உன் தவறு தான்!
முயன்றால் முடியாதது எதுவுமில்லை உணரு
முயன்றே வாழ்வில் முன்னேறப் பாரு !
உழைத்தால் உயர்வு ஓய்ந்தால் தாழ்வு
ஒன்றுகூடி உழைத்தால் கிட்டும் உயர்வு !
தெய்வத்தால் முடியாதது கூட உன்னுடைய
முயற்சியால் முடியும் என்றார் திருவள்ளுவர் !
உழைப்பால் சாதித்தவர்கள் கோடி உண்டு
உழைத்தால் உனக்கும் வரலாற்றில் இடமுண்டு !
வறுமை என்பது தலைவிதி என்று எண்ணாதே
வறுமை ஒழிக்க வழியைத் தேடுவது கடமை !
வறுமை என்பது நிரந்தரம் அன்று – உழைத்தால்
வளம் பெறலாம் சாதித்து நிலைக்கலாம் !
படகோட்டி மகனாகப் பிறந்து முதற்குடிமகனாக
பாரதத்திற்கு பதவி ஏற்றவர் அப்துல் கலாம் !
செய்தித்தாள் விற்றுப் படித்து வாழ்வில் உயர்ந்து
தலைப்புச் செய்தியானவர் மாமனிதர் கலாம் !
வறுமையை உடைத்து வெளியே வந்து
வாழ்க்கையில் சாதிக்க முயற்சி செய் !
சோம்பிக் கிடப்பது சோகம் தரும்
சுறுசுறுப்பே வாழ்வில் வெற்றியைத் தரும் !

