மந்தரங் காம்பாய் மணிவிசும் போலையாய் - முத்தொள்ளாயிரம் 48

நேரிசை வெண்பா
(’ந்’ ‘ங்’ மெல்லின எதுகை)

மந்தரங் காம்பாய் மணிவிசும் போலையாய்த்
திங்கள் அதற்கோர் திலதமாய் - எங்கணும்
முற்றுநீர் வைய முழுதும் நிழற்றுமே
கொற்றப்போர்க் கிள்ளி குடை! 48

- - முத்தொள்ளாயிரம், சோழன்

பொருளுரை:

கிள்ளியின் வெண்கொற்றக் குடைக்கு மந்தர-மலை காம்பு.. நீலநிற வானம் குடையில் விரிந்திருக்கும் ஓலை,. வானத்து நிலா அந்தக் குடையின் உள்முகட்டில் இருக்கும் நெற்றிப்பொட்டு,. இப்படி இருந்துகொண்டு உலகம் முழுவதற்கும் நிழல் தந்து அந்தக் குடை காப்பாற்றுகிறது; அது சரி!. என்னை மட்டும் ஏங்கவைக்கிறது. இது கொடுமை!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Oct-25, 3:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே