இரை ✍🏽

இடிந்த பொழுதுகளில்
விழித்த நினைவுகளில்
சென்ற பயணங்களில்
கடந்த காலங்களில்
வேண்டிய வரங்களில்
உறங்காத இரவுகளில்
தொலையாத கனவுகளில்
பறக்கும் நிமிடங்களில்
முற்றாத கனிகளாய்
வற்றாத நதிகளாய்
பிரியாத நண்பனாய்
புரியாத புதிர்களாய்
திசைகாட்டும் கருவியாய்
முப்பொழுதும் எப்பொழுதும்
என்னோடு ஒட்டிக்கொள்ளும்
என் இரை; எழுத்துத்தான்!

எழுதியவர் : யோகராணி கணேசன் (18-Oct-25, 1:33 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 54

மேலே