குப்சா வர்றார்
குப்சா வர்றார்.
யாருடா அந்த குப்சா? உனக்குத் தெரிஞ்சவரா?
@@@@@@@
உனக்கும் தெரிஞ்சவர் தான்.
@@@@
எனக்கும் தெரியுமா? எப்பிடி?
@@@@@@
அவரு நம்ம ஊருக்காரர். இரண்டு வருசத்துக்கு முன்னாடி
சுங்கத் துறையில் வேலை கெடச்சு பம்பாய்க்குப் போனாரே
அவரை ஞாபகம் இருக்குதா?
@@@@@@@
ஆமாம் நம்ம குப்புசாமி.
@@@@@@@@@
அவரு தான் 'குப்சா'. இந்திக்காரங்களுக்கும்
மராட்டிக்காரர்களுக்கும் அவரு பேரைச் சரியா உச்சரிக்கத்
தெரியாமல் குப்பாசாமி, குப்சாமின்னு கண்டபடி
உச்சரிச்சாங்களாம். அவரு மனம் நொந்து போய் தன்னோட
பேரை 'குப்சா' -ன்னு மாத்திட்டாரம். நேற்றுத்தான் எனக்குத்
தெரியும்.
@@@@@@@
அப்ப அவரோட தம்பி கந்தசாமி வடக்க போனா அவரு பேரு
எப்பிடி மாறும்.
@@@@@@
கந்சா ஆகும்.
@@@@@@@@@@@@@

