பூவிலே சிறந்த பூ என்ன பூ
பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ
பூவிலே சிறந்த பூ என்ன பூ?
இதுதான் கேள்வி.
இதற்கு ஒவ்வொருவரும் என்ன பதில் சொல்கிறர்கள் என்று பாப்போம்.
பொது மருத்துவர்: சிரப்பு (cough)
சிறப்பு மருத்துவர்: உறுப்பு
பள்ளிமாணவன்: படிப்பு
கல்லூரி மாணவன்: இளிப்பு
பாகற்காய் வியாபாரி: கசப்பு
இனிப்பு கடைக்காரர்: இனிப்பு
சைவ மனிதருக்கு: பருப்பு
பாதுகாப்பு அமைச்சர்: துருப்பு
இளம் வாலிபர்: துடிப்பு
பாட்டா கடைக்காரர்: செருப்பு
குண்டு மனிதர்: தடிப்பு
மாவுமில் நடத்துபவர்: சலிப்பு
திமிரு பிடித்தவர்: கொழுப்பு
குணசித்ர நடிகர்: நடிப்பு
இடுப்பு ஒடிந்தவர்: பிடிப்பு
தள்ளாடும் தாத்தா: மறப்பு
குற்றவாளிக்குப் பிடித்தது: மறுப்பு
தீவிரவாதி: வெடிப்பு
சிவகாசி பையன்: மத்தாப்பு
நகைச்சுவை நடிகர்: சிரிப்பு
சினிமா வில்லன்: உரிப்பு (துகில்)
ஹோட்டலில் சுத்தம் செய்பவர்: துடைப்பு
கவிஞன்: படைப்பு
பால்காரர்: சுரப்பு
மகப்பேறு மருத்துவர்: பிறப்பு
எமன்: இறப்பு
வதந்தி பேர்வழி: பரப்பு
தொழிலதிபர்: குவிப்பு (பணமே தான்)
கள்ள வியாபாரி: ஆப்பு
அரசியல்வாதி: சால்ஜாப்பு
பிச்சைக்காரன்: விரிப்பு (தெருவில்)
டொனால்ட் ட்ரம்ப்: டாரிப்பு (tariff குறிப்பாக இந்தியாவின்மீது)
வீட்டுக்காரிக்கு: பூ

