திருவாதி திருத்திகா
பாட்டியம்மா, எனக்குத் திருமணம் ஆகி
அஞ்சு வருசமா குழந்தப் பேறு இல்லாம
என் மனைவி ஏக்ரேஷ்வதி அழுது அழுது
ஏக்கத்திலெ நொடிஞ்சு போனாள்.
ஆண்டவன் புண்ணியத்தில் இப்ப அவள்
உண்டாகியிருக்கிறாள். அவளுக்கு உங்க
வாழ்த்து வேண்டும்.
#@@@@##
ஏண்டா பேரப் பையா. பைனேசு (பைனேஷ்)
உங்க இரண்டு பேருக்கும் நான் வேண்டாத
கடவுள் இல்லை. இப்பத்தான் என
வேண்டுதல் நிறைவேறியிருக்குது. உன்
மனைவிக்கு மகாலட்சுமி தாண்டா
பிறக்கும்.
#############
(ஏழு மாதம் சென்றபின்)
பாட்டியம்மா நீங்க சொன்னபடி என்
மனைவிக்கு மகாலட்சுமி, இல்ல, இல்ல,
இரண்டு மகாலட்சுமிங்க
பிறந்திருக்குதுங்க
@**###@@#
நீ கொடுத்து வச்சவண்டா பேரா!
@@@@@@@
சோசியர்கிட்டப் போனேன். பெண்
குழந்தைகள் பிறந்த நேரம் ரொம்ப நல்ல
நேரம்னு சொன்னாரு. திருவாதிரை
நட்சத்திரமாம்.
அந்த நட்சத்திரப்படி நம்மளையே
குழந்தைகளுக்குப் பேரு வச்சுக்கச்
சொன்னாரு. நீங்களே குழந்தைகளுக்குப்
பேரு வச்சுக்க சொன்னாரு. நீங்களே
பேரு வையுங்க பாட்டியம்மா.
@@@@@@@@
உம் .... திருவாதிரை நட்சத்திரம். ஒரு
குழந்தைக்கு 'திருவாதி'ன்னு பேரு வச்சுடு.
இன்னொரு குழந்தைக்குத்
'திருத்தியா'ன்னு பேரு வச்சுருடா பேரப்
பையா.
@@@@@@@
திருவாதி. திருத்தியா. ஸ்வீட் நேம்ஸ் பாட்டி.
பாட்டி இந்த இரண்டு பேருங்களையும் வச்ச
உங்களை புதுசா 'பணநாயகன்'னு ஒரு
திரைப்படம் வெளியாகியிருக்குது. அந்தப்
படத்துக்கு உங்களைக் கூட்டிட்டு போறேன்.
@@@@@@@
இந்த வயசில் எனக்கு எதுகுக்குடா பேரா
திரைப்படம். தாய், தகப்பன், ஆசிரியர்கள்,
பெரியவங்களை மதிக்காம பாலைக்
குடம் குடமா ஊத்தி நடிகர்கள் படத்து
மேலே ஊற்றி வழிபாடு செய்யற
உருப்படாத பையன்களுக்கு இந்தக்
காலத்தில் சீரழியற பொழுது போக்கு.
அந்தக் கருமம் எல்லாம் உனக்கும்
வேண்டாம் எனக்கும் வேண்டாண்டா பேரா.
@@#@@@@#
சரிங்க பாட்டிம்மா. நான் இனிமேல் அந்த
மாதிரி நேரத்தை வீணடிககற வேலையைச்
செய்யமாட்டேன்

