சும்முலா
டேய் பெரிய பையா, பெத்துரேசு
(பெத்ரேஷ்) உன்ற பேத்திக்குப் பேரு
வச்சீட்டீங்களா?
@@@@@
இல்லமா. என்ன பேரு வைக்கிறதுன்னு
தெரியாம முழிச்சிட்டு இருக்கிறோம்.
@@@@@@@
ஏண்டா பெத்துரேசு பிள்ளைங்களுக்கு
இந்திப் பேருங்கள இல்லன்னா இந்திப்
பேரு மாதிரி உள்ள பேருங்களை
வைக்கிறதது தானே நம்ம தமிழ்.
மக்களோட வழக்கம். ஒரு வருசத்துக்கு
20,000 ரூபாய் சம்பாதிக்கிறவங்கள்ல
இருந்து ஒரு படத்துக்கு 200 கோடி
சம்பாதிக்கிறவங்க வரை எல்லோரும்
அவுங்க பிள்ளைகளுக்கு இந்திப் பேரை
வச்சுப் பெருமைப் படறாங்க. நீ தப்பித்
தவறிக்கூட உன்ற பேத்திக்குத் தமிழ்ப்
பேரை வச்சு அசிங்கப்பட்டுப் போகதடா.
@@@@@@@
இல்லம்மா. என்ற பேத்திக்கு நீங்களே
உங்களுக்குத் தெரிஞ்ச இந்திப் பேரு
அல்லது இந்தி மாதிரி உள்ள பேரைச்
சொல்லுங்க அம்மா. அந்தப் பேரையே
உங்க கொள்ளுப் பேத்திக்கு வச்சிடலாம்.
@@@@@@
நம்ம தொலைக்காட்சிப் பெட்டில வடமாநில
அரசியல் தலைவர்கள் இந்தில பேசறதைக்
கேட்டிருக்கிறேன். அப்ப சிலர் 'சும்முலா,
சும்முலா'ன்னு (Jumla) சொல்லுவாங்க.
அந்தச் சொல்லையே என்ற கொள்ளுப்
பேத்தியின் பேரா வச்சிடலாம்.
@@@@@@
நீங்க சொன்னா அது சரியாத்தான்
இருக்கும் அம்மா. என்ற செல்லப் பேத்தி
பேரு 'ஜும்லா, ஜும்லா, ஜும்லா'. ஜும்லா
சொல்லறதுக்கு ரொம்ப இனிமையா
இருக்குது அம்மா.

