என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
என்னதான் கஷ்டம்
வந்தாலும் முட்டி
மோது ;
முரண் படு ,
முடிவுக்கு வராதே ,
வாழ்க்கை இன்னும்
முடியவில்லை .
வாழ்வது ஒரு யாகம் ,
அதில் வீழ்வதை விட,
ஜோதியாக மாறு ;
மன்றாடு, மண்டியிடு
மதி கெட்டுப் போகாதே ,
பொறுமைக்கு பெருமை சேர்
பார்த்தால் பரவசம் அடையாதே ?
உலகத்தில் பற்று வை
உள்ளத்தை கொடு;
உணர்வை கட்டி எழுப்பு
உண்மையாக இரு....
எதற்கும் அஞ்சாதே
அமைதியை நாடு,
ஆணவம் கொள்ளாதே
இப்படி சொல்வதால்
வாழ்க்கை என்ன அவ்வளவு
எளிதா ? என்று எள்ளி
நகை யாடாதே !!
ஆம் ! வாழ்வது தான்
சிறந்தது .
உன்னிடத்தில் இருந்து தொடங்கு....
முயன்ற வரை முயற்சி செய் !
முடியாதவை என்பது மற்றவரின் கணக்கு; நமக்கு ஒரு
தொடர் போராட்டம் ....
அந்தப் போராட்டம்
அறத்துடன்
அனைவருக்கும்
ஆக இருக்கட்டும்.

