தேசெனவே நான்கொள்வேன் தேர்ந்து - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
வெண்பா எழுத விரும்பி முயன்றேனே;
ஒண்பாவும் நானெழுத உத்தாரம் – எண்ணுமுன்னே
ஆசானே நீதந்தாய்; ஆனமட்டும் நான்மறவேன்
தேசெனவே நான்கொள்வேன் தேர்ந்து!
- வ.க.கன்னியப்பன்

