ஸ்ரீபுளி எங்கே
ஸ்ரீபுளி எங்கே?
@@@@@
என்னடா தம்பி வடக்கே மூணு வருசமா வேலை பார்க்கிற. தமிழ்
மறந்து போச்சா?
ஸ்ரீபுளி எந்தக் கடையில விற்கறாங்க?
@@@@@
இல்ல. இல்ல. என் உச்சரிப்பு தப்பாப் போச்சு. ஸ்ரீபுலியை எடுதுட்டு
வாங்க.
@@@@@@@@@
புலி நம்ம வீட்டு விலங்கா? என்னடா சொல்லற?
@@@@@@@@@@
இந்தப் பலகையில அடிச்ச திருகாணி ஆட்டம் காணுது. அதுக்குத்
தான் ஸ்ரீபுலியைக் கேட்டேன்.
##########
டேய் தம்பி அது திருப்புளி. திருப்பற உளி.
@@@@@@@@@@
நான் மூணு வருசமா வடக்க வாளறேன். தமிளே சரியாப் பேச வரல
அங்க ஸ்ரீயைத் தான் ஒருத்தரு பேறுக்கு முன்னாடியும் சாமி பேறுக்கு
முன்னாடியும் போடுவாங்க. அந்த ஸ்ரீ எனக்குப் பழகிப் போச்சு. ஒரே
நாடு. ஒறே மொலின்னு அரசியல் தலைவர்கல் சொள்ளர மாநிளத்தில்
இருக்கிறேண்.
@@@@@@
சரி. சரி. நீ அடுத்த இரண்டு ஆண்டு கழிச்சு வந்தா இந்தில தான்
பேசுவ. நாங்க உன் பேச்சை மொழிப் பெயர்ப்பு செய்ய ஒரு இந்தி
ஆசிரியரை ஏற்பாடு செஞ்சு வைக்கிறோம்,

