வெண்ணிலா போலவே வந்தநீ காலைவை கண்ணம்மா பஃறொடை வெண்பா

பண்படும் பச்சைப் பயிர்வளமும் ஓங்கிடும்
மண்ணும்ஊர் மக்களின் வாழ்வும் உயர்ந்திடும்
நண்பகல் சூரியன் நல்லொளி போலொளிரும்
வெண்ணிலா போலவே வந்தநீ காலைவை
கண்ணம்மா இக்கழனிக் குள்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Nov-25, 11:26 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 25

மேலே