ஒண்ணுமில்ல

ஒண்ணுமில்ல...!
08 / 10 / 2024

கையில ஒண்ணுமில்ல
பையில ஒண்ணுமில்ல
வாயில சொல்லிருக்கு
வா வாழ்ந்து பார்த்துடலாம்.
பார்த்ததும் ஒண்ணுமில்ல
படிச்சதும் ஒண்ணுமில்ல
வார்த்தையில் வலுவிருக்கு
வா போராடி வென்றிடலாம்.
வென்றிட ஒண்ணுமில்ல
கொன்றிட ஒண்ணுமில்ல
மனதினில் துணிவிருக்கு
வா ஏட்டினில் பதிவிடலாம்.
ஏட்டில ஒண்ணுமில்ல
பாட்டில ஒண்ணுமில்ல
நாவில மெய்யிருக்கு
வா எழுதியே வைத்திடலாம்.
நானும் ஒண்ணுமில்ல
நீயும் ஒண்ணுமில்ல
நமக்கு மேலே ஒருவனுண்டு
வா வணங்கியே வாழ்ந்திடலாம்.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (2-Nov-25, 8:09 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 4

மேலே